Thursday 9 August 2012

முப்பெரும் நிகழ்ச்சி

கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திறன் வளர்ப்பு  பிரிவின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தகவல் கையேடு வெளியிடும் நிகழ்ச்சியானது புதுகோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 08.08.2012 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து அதனை தொடர்ந்து புது வாழ்வு திட்ட உயிர் மூச்சுடன் துவங்கியது.
 
புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் திருமதி. S . வசுமதி அனைவரயும் வரவேற்று நிகழ்ச்சியின் நோக்கத்தை குறித்து பேசினார்.
அதனை தொடர்ந்து குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி துவக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் பெருந்தலைவர் (மாவட்ட ஆட்சியர்)  தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் அவர் பேசும் போது " புது வாழ்வு திட்டத்தில் இருந்து இன்று முதல் கட்டமாக 49 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு துவக்க நிதியாக தலா ரூபாய் 40000 வீதம் ரூபாய் 19,60,000
வழங்கப்படுகிறது. இதனை முறையாகப் பயன்படுத்தி வரும் காலத்திலும் திட்டத்தின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வறுமையை குறைக்க கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும் அதனுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் திறன் வளர்ப்பு  பிரிவின் கீழ் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற வந்திருக்கும் இளைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை முன்னோடி வங்கி மேலாளர் திரு. அமர்நாத் பாபு மற்றும் நபார்டு உதவி பொது மேலாளர் திரு.ஆனந்த் அவர்களும்  வாழ்த்துரை வழங்கினர்.

அதனை தொடர்ந்து 49 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு துவக்க நிதி மற்றும்  திறன் வளர்ப்பு  பிரிவின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு (JCB , CNC) சான்றிதழும் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்களுக்கு ஓட்டுனர் உரிமத்தையும் புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் பெருந்தலைவர் மற்றும் விருந்தினர்களும் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அனைத்து அரசுத்துறை சேவைகள் அடங்கிய தகவல் கையேடு வெளியிடப்பட்டது. முதல் பிரதியை புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் மாவட்ட மேலாளர் வழங்க புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் பெருந்தலைவர் (மாவட்ட ஆட்சியர்) பெற்று கொண்டார்.

இறுதியில் புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் உதவி திட்ட மேலாளர் திரு. பாலசுப்ரமணியன் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

செய்திதாளில் நமது செய்திகள்:


 

No comments:

Post a Comment