Thursday 27 November 2014

தேசிய அளவிலான போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்ட மாற்று திறனாளிகளின் சாதனைகள்

தேசிய அளவிலான போட்டிகளில் புதுக்கோட்டை மாவட்ட மாற்று திறனாளிகளின்  சாதனைகள் 
நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 14 வது தேசிய நீச்சல் போட்டிகள் மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் நடத்தப்பட்டது. இதில் கலந்து கொண்ட  புதுக்கோட்டை மாவட்ட மாற்று திறனாளிகள் 5 பதக்கங்களை பெற்றனர். இதில் 3 தங்கமும் 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலமும் அடங்கும். 
இதே போல் சண்டிகாரில் நவம்பர் மாதம்3ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான 4 வது தேசிய தொழில் திறன் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் புதுக்கோட்டை மாவட்ட மாற்று திறனாளி திரு. ராஜேந்திரன் என்பவர் மரவேலைபாடு பிரிவில் வெண்கல பதக்கத்தை பெற்று மாவட்டத்திற்கு பெருமையை தேடித்தந்தார்.
வெற்றி பெற்ற அனைவரையும் புது வாழ்வு திட்டத்தின் திட்ட இயக்குனர் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் ஆகியோர் பாராட்டினர்.














Tuesday 30 September 2014

தடகள போட்டிகளில் புதுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் சாதனை



சென்னையில் செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் 26 ஆம் தேதி வரை நடைபெற்ற தடகள போட்டிகளில் புதுக்கோட்டை மாற்றுத் திறனாளிகள் திறம்பட விளையாடி 13 பதக்கங்களை பெற்றனர் (2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம்) 



Monday 28 July 2014

பாரம்பரிய உணவு திருவிழா

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி  பணிகள் திட்டம்     சார்பில்  நடத்தப்பட்ட    பாரம்பரிய உணவு  திருவிழா 







http://www.scribd.com/doc/235342600/Native-Food-Exhibition-Stall

Friday 7 February 2014

முற்றத்தில் புதுக்கோட்டை புது வாழ்வு செய்திகள்- ஜனவரி 2014

முற்றத்தில் புதுக்கோட்டை புது வாழ்வு செய்திகள் - ஜனவரி 2014




இளைஞர் வேலை வாய்ப்பு பயிற்சி பிரசார ரதம்

இளைஞர் வேலை வாய்ப்பு பயிற்சி பிரசார ரதம் 3.2.14 அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் திரு. செ. மனோகரன். இ.ஆ.ப. அவர்களால் கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது. உடன் புது வாழ்வு மாவட்ட திட்ட மேலாளர் திருமதி. செ. வசுமதி அவர்கள் மற்றும் உதவி திட்ட மேலாளர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.தகுதியுள்ள இலக்கு மக்கள் குடும்பங்களில் உள்ள இளைஞர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை பெருக்கிடவும் இவர்களுக்கான திறன் வளர்ப்பு பயிற்சி வாய்ப்புகளை தெரிய படுத்தவும் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் நிறுவனங்களை அறிந்து கொள்ளவும் மேலும் வேலை வாய்ப்பை பெற்று தரவும் இது உதவும். இந்த ஊர்தியானது புது வாழ்வு திட்டம் செயல்படும் ஒன்றியங்களான கந்தர்வக்கோட்டை , குன்றாண்டார் கோயில், அன்னவாசல் மற்றும் கறம்பக்குடி  பகுதியில் உள்ள அனைத்து ஊராட்சி  பகுதிகளிலும் செல்லும்.