Monday 1 April 2013

முற்றத்தில் புதுக்கோட்டை புது வாழ்வு செய்திகள்:


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையானது மகளிர் சுய உதவி குழுக்களுக்கான மாத இதழாக தமிழ்நாடு  மகளிர் மேம்பாட்டு முற்றம் என்ற இதழை வெளியிடுகிறது. இதன் மூலம் தமிழ் நாட்டிலுள்ள மகளிர் சுய உதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, குடியிருப்பு அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொண்டு நிறுவனங்கள்  போன்றவற்றிக்கு தமிழக அரசின் சிறப்பு திட்டங்கள்  நாட்டு நடப்புகள் மற்றும் தற்போதைய மகளிர் நிலையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் போன்றவை மக்களால் குறிப்பாக மகளிருக்கு அறியப்படுகிறது. இந்த முற்றம் இதழில் மார்ச் 2013 ஆம் ஆண்டிற்கான  இதழில் புது வாழ்வு திட்டதிற்கென ஒதுக்க பட்டுள்ள  பகுதியில் புதுக்கோட்டை செய்திகள் பிரதான இடம் பிடித்துள்ளது.
இதனை நீங்களும் கண்டு களிக்க நகல் எடுத்து இணைத்துள்ளோம்.









இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம்

புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் சார்பில் 16.03.2013 அன்று புதுக்கோட்டை சந்தைபேட்டை நகராட்சி பள்ளியில் புது வாழ்வு திட்டம் செயல் படுத்தப்படும் ஒன்றியங்களான கந்தர்வக்கோட்டை, அன்னவாசல், கறம்பக்குடி மற்றும் குன்னாண்டார்கோயில் பகுதியில் உள்ள இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இம்முகாமிற்கு L  & T , TVS  Logistics , Capital  CNC, உணவாக்கம் மற்றும் உணவியல் தொழில்நுட்ப நிறுவனம், நவநாகரீக ஆயத்த ஆடைகள் தயாரிப்பு நிறுவனம், சங்கர் இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி, வெங்கடேஸ்வர ஓட்டுனர் பயிற்சி நிறுவனம் மற்றும் CSC  கணினி பயிற்சிநிறுவனம்ஆகிய நிறுவனங்கள் பங்கேற்றன. 

இந்த முகாமில் கலந்து கொண்ட இளைஞர்களின் எண்ணிக்கை 1021 ஆகும் இதில் தெர்ந்தெடுக்கப்பட்டவர்களின்  எண்ணிக்கை 414 ஆகும். 

மேலும் இம்முகாமிலேயே கறம்பக்குடி CSC  கணினி பயிற்சி நிறுவனத்தில் TALLY  பயிற்சி பெற்ற 58 இளைஞிகளுக்கும், மதுரை சங்கர் இன்ஸ்டியூட் ஆப் இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் JCB  பயிற்சி பெற்ற 19 இளைஞர்கள்  என மொத்தம் 77 நபர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிக்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் JCB  பயிற்சி பெற்ற 19 இளைஞர்களுக்கு பணி  நியமன ஆணையும் வழங்கப்பட்டது. 

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் தலைமை ஏற்றார். புது வாழ்வு மாவட்ட திட்ட மேலாளர் அனைவரையும் வரவேற்று  பேசினார். மாவட்ட ஊராட்சி தலைவர், நகராட்சி பெருந்தலைவர் , நகராட்சி ஆணையர், நகராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்துரை வழங்கினர். உதவி திட்ட மேலாளர் (சந்தைபடுத்தல்) நன்றியுரையாற்றினார். முகாம் ஒருங்கிணைப்பு பணிகளையும் மேற்கொண்டார்.