Wednesday 7 August 2013

முற்றத்தில் புதுக்கோட்டை புது வாழ்வு செய்திகள்




மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் மருத்துவ முகாம்

கந்தர்வக்கோட்டையில் 03.08.13  அன்று அரசு துறைகளுடன் புது வாழ்வு திட்டம் இணைந்து மாற்று திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் மருத்துவ முகாம்  நடைபெற்றது.
முகாமிற்கு மாண்புமிகு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு தேசிய அடையாள அட்டைகள் மற்றும் நல திட்ட உதவிகளும் மாற்று திறனாளிகளுக்கு வழங்கினார்.
நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி தலைவர் அவர்கள் தலைமை தாங்கினார்.
மேலும் புதுக்கோட்டை, விராலிமலை சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி தலைவர், அரசு அலுவலர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

முகாமில் 398 மாற்று திறனாளிகள் புதிதாக தேசிய அடையாள அட்டைகள் பெற்றுள்ளனர்.
புது வாழ்வு திட்டம் மூலம் மாற்று திறனாளிகள் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் உதவி உபகரணங்கள் பெறுவதற்கு மாவட்ட மாற்று திறனாளிகள்நலத்துறைக்கு விண்ணப்பம் அனுப்ப வழிநடத்தப்பட்டது. அவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 144 மாற்று திறனாளிகள்உதவி உபகரணங்கள் பெற்றனர்(இதன் மதிப்பு ரூ. 8,25,000 ஆகும்). அதன் விபரம் பின்வருமாறு:

  • பெட்ரோல் ஸ்கூட்டர் பெற்றவர்கள் : 4
  • மூன்று சக்கர வண்டி பெற்றவர்கள் : 50
  • சக்கர நாற்காலி பெற்றவர்கள் : 25
  • காதொலி கருவி பெற்றவர்கள் : 10
  • காலிப்பர் பெற்றவர்கள் : 10
  • செயற்கை கால் பெற்றவர்கள் : 5
  • கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல் பெற்றவர்கள் : 40
வருவாய் துறை மூலம் மொத்தம் 191 நபர்கள் மாதந்திர உதவித்தொகைக்கான ஆணையை பெற்றனர். இவர்களில் 175 மாற்று திறனாளிகளுக்கான மாதந்திர உதவி தொகையும், 6 வயதானோர் மாதந்திர உதவி தொகையும், 10 விதவை உதவி தொகையும் அடங்கும். இதன் ஒரு மாதத்திற்க்கான நலத்திட்டத்தின் மதிப்பு ரூ. 1,91,000 ஆகும்.
புது வாழ்வு திட்டம் மூலம் செயல்படும் கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களின் மூலம் 68 நபர்களுக்கு அவர்களுடைய வாழ்வாதார முன்னேற்றதிர்க்கான வட்டியில்லா தனி நபர் கடன் ரூ. 21,05,000 மதிப்பில் வழங்கப்பட்டது. மேலும், 21 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 3,90,000 ஆதார  நிதியும்,
மாற்று திறனாளிகள் குழுவிற்கு ரூ. 3,40,000 மதிப்பிலான ஆதார  நிதியும் வழங்கப்பட்டது.

முகாம் மூலம் வழங்கப்பட்ட நலத்திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.38,51,000 ஆகும்.