Thursday 30 August 2012

அரசு நலத்திட்ட உதவிகள் தகவல் கையேடு

புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் மூலம் அனைத்து அரசு துறைகளின் சேவைகளை  பெறுவதற்கான தகுதிகள், இணைக்க வேண்டிய ஆவணங்கள் போன்ற விபரங்கள் அடங்கிய அரசு நலத்திட்ட உதவிகள்  தகவல் கையேட்டை காண கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.


 
http://www.scribd.com/doc/133085772/Convergence-Booklet-Pudukkottai-District
நன்றி!





Wednesday 29 August 2012

திட்ட அலுவலர் - மகளிர் திட்டம்-மக்கள் நிலை ஆய்வு பார்வையிடல்


கடந்த 21 .08 .2012 அன்று புதுக்கோட்டை மகளிர் திட்டத்தில் இருந்து திட்ட அலுவலர் திரு. திருவரங்கம் அவர்கள் புதுக்கோட்டை புதுவாழ்வு திட்ட  கந்தர்வகோட்டை களப்பகுதி பழைய கந்தர்வகோட்டையில் உள்ள மாதாகோவில் தெரு குடியிருப்பில் நடைபெற்ற மக்கள் நிலை ஆய்வில் சமூக கிராம வரைபடம் மற்றும் பொருளாதார தரம் பிரித்தலை பார்வையிட்டார்.
புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் மக்கள் நிலை ஆய்வினில் மக்களின் பங்கினை விளக்கினார்.
 
மக்கள் நிலை ஆய்வு முறைகள் குறித்து மக்கள் நிலை ஆய்வு குழுவினர் விளக்கினர்.
 
மேலும் ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பார்வையிட்டு முறையாக செயல்படுவதற்கான வழிமுறைகளை மக்களிடம் கலந்தாலோசித்து தெளிவுபடுத்தினார். 
 

Thursday 23 August 2012

குறுந்தகடு இயக்கி வழங்கும் நிகழ்வு


புதுக்கோட்டையில் சுதந்திர தினத்தன்று மாவட்ட நிர்வாகம் சார்பில்
நடத்தப்பட்ட சுதந்திர தின விழாவில் புது வாழ்வு திட்ட பயனாளிகள் 5 பார்வை குறைபாடு உடைய மாற்று திறனாளிகளுக்கு கல்வி கற்பதற்கு உதவியாக புது வாழ்வு திட்டம் சார்பில் மாவட்ட ஆட்சியர் கரங்களால்   குறுந்தகடு இயக்கி வழங்கப்பட்டது. 


 
 



Tuesday 21 August 2012

சுதந்திர தின கிராம சபைகள்

சுதந்திர தின கிராம சபைகள் :

புதுக்கோட்டையில் சுதந்திர தினத்தன்று நடைபெற்ற கிராமசபையில் நமது திட்டத்தின் சார்பாக ... கிராம சபைகளில் நமது செயல்பாடுகள் நடைபெற்றன.
அவை கீழ்க்கண்டவாறு:

கிராம   சபை நடைபெற்ற  ஊராட்சிகள் :

இலக்கு மக்கள் இறுதி செய்யப்பட்டது.

       
     7     ஊராட்சிகள் 

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டது.

      12     ஊராட்சிகள்   

ஊராட்சி துவக்க நிதி பயன்பாட்டு சான்றிதழ் பெறப்பட்டது.

      19   ஊராட்சிகள்

இதனை தவிர கிராம சபையில் கீழ்க்கண்ட காரியங்கள் முக்கியமாக கவனிக்கப்பட்டது.
  •  கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க செயல்பாடுகள் பற்றி கூறுதல் 
  • சுய உதவி குழுக்கள் அமைத்தல் மற்றும் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை மறு சீரமைத்தல் 
  • ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகத்தை பராமரித்தல் 
  • பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்தல் 
  • எச்.ஐ.வி/எய்ட்ஸ் குறித்த உறுதிமொழி எடுத்தல்.

Thursday 9 August 2012

முப்பெரும் நிகழ்ச்சி

கிராம வறுமை ஒழிப்பு சங்க துவக்க நிதி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் திறன் வளர்ப்பு  பிரிவின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மற்றும் தகவல் கையேடு வெளியிடும் நிகழ்ச்சியானது புதுகோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் 08.08.2012 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்து அதனை தொடர்ந்து புது வாழ்வு திட்ட உயிர் மூச்சுடன் துவங்கியது.
 
புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்ட மாவட்ட மேலாளர் திருமதி. S . வசுமதி அனைவரயும் வரவேற்று நிகழ்ச்சியின் நோக்கத்தை குறித்து பேசினார்.
அதனை தொடர்ந்து குத்து விளக்கேற்றி நிகழ்ச்சி துவக்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் பெருந்தலைவர் (மாவட்ட ஆட்சியர்)  தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் அவர் பேசும் போது " புது வாழ்வு திட்டத்தில் இருந்து இன்று முதல் கட்டமாக 49 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு துவக்க நிதியாக தலா ரூபாய் 40000 வீதம் ரூபாய் 19,60,000
வழங்கப்படுகிறது. இதனை முறையாகப் பயன்படுத்தி வரும் காலத்திலும் திட்டத்தின் அடிப்படையில் சிறப்பாக செயல்பட்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் வறுமையை குறைக்க கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களும் அதனுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளும் பாடுபட வேண்டும் என்று கேட்டு கொண்டார். மேலும் திறன் வளர்ப்பு  பிரிவின் கீழ் பயிற்சி பெற்று சான்றிதழ் பெற வந்திருக்கும் இளைஞர்களுக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து புதுக்கோட்டை முன்னோடி வங்கி மேலாளர் திரு. அமர்நாத் பாபு மற்றும் நபார்டு உதவி பொது மேலாளர் திரு.ஆனந்த் அவர்களும்  வாழ்த்துரை வழங்கினர்.

அதனை தொடர்ந்து 49 கிராம வறுமை ஒழிப்பு சங்கங்களுக்கு துவக்க நிதி மற்றும்  திறன் வளர்ப்பு  பிரிவின் கீழ் பயிற்சி பெற்றவர்களுக்கு (JCB , CNC) சான்றிதழும் ஓட்டுனர் பயிற்சி பெற்றவர்களுக்கு ஓட்டுனர் உரிமத்தையும் புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் பெருந்தலைவர் மற்றும் விருந்தினர்களும் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட அனைத்து அரசுத்துறை சேவைகள் அடங்கிய தகவல் கையேடு வெளியிடப்பட்டது. முதல் பிரதியை புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் மாவட்ட மேலாளர் வழங்க புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் பெருந்தலைவர் (மாவட்ட ஆட்சியர்) பெற்று கொண்டார்.

இறுதியில் புதுக்கோட்டை மாவட்ட புது வாழ்வு திட்டத்தின் உதவி திட்ட மேலாளர் திரு. பாலசுப்ரமணியன் நன்றியுரை வழங்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

செய்திதாளில் நமது செய்திகள்:


 

Wednesday 1 August 2012

சிறப்பு கிராம சபை

புது வாழ்வு திட்டத்தின் மூலம் கடந்த 13.07. 2012 மற்றும்  31.07.2012 அன்று  நடந்த  சிறப்பு கிராம   சபைகளில் கீழ்க்கண்ட  பணிகள் நடந்தேறியது.

13.07. 2012:

கிராம   சபை நடைபெற்ற  ஊராட்சிகள் : 40

இலக்கு மக்கள் இறுதி செய்யப்பட்டது.
    20     ஊராட்சிகள் 

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டது.

   20         ஊராட்சிகள்   


 31.07.2012

கிராம   சபை நடைபெற்ற  ஊராட்சிகள் : 64

இலக்கு மக்கள் இறுதி செய்யப்பட்டது.
 26           ஊராட்சிகள் 

கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அமைக்கப்பட்டது.

  20          ஊராட்சிகள்   

ஊராட்சி துவக்க நிதி பயன்பாட்டு சான்றிதழ் பெறப்பட்டது.

 18           ஊராட்சிகள்