Monday 3 September 2012

நாகபட்டினம் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மக்கள் நிலை ஆய்வினை பார்வையிடல்


31.08.2012 அன்று  நாகபட்டினம் மாவட்டம்  மகளிர் திட்டத்தில் இருந்து திட்ட அலுவலர் திரு. M. வடிவேலு அவர்கள் தங்களுடைய உதவி திட்ட அலுவலர்களுடனும்  நாகபட்டினம் மாவட்ட  புதுவாழ்வு திட்ட  மேலாளர் திரு. M. ஜெய் கணேஷ் அவர்களுடனும் கறம்பக்குடி களப்பகுதியில் உள்ள   முள்ளங்குறிச்சி ஊராட்சி சாந்தம்பட்டி குடியிருப்பில் நடைபெற்ற மக்கள் நிலை ஆய்வில் கலந்து கொண்டு மக்கள் நிலை ஆய்வின் நிலைகளான கிராம சமூக வரைபடம் வரைதல் மற்றும் பொருளாதார தரம் பிரித்தல் ஆகிய பணிகளை பார்வையிட்டனர். 
மேலும், புதுக்கோட்டை மாவட்டம் மகளிர் திட்டத்தில் இருந்து திட்ட அலுவலர் திரு. V  . திருவரங்கம் அவர்களும் தங்களுடைய உதவி திட்ட அலுவலர்களுடன் வந்திருந்து மக்கள் நிலை ஆய்வின் நிலைகளான கிராம சமூக வரைபடம் வரைதல் மற்றும் பொருளாதார தரம் பிரித்தல் ஆகிய பணிகளை பார்வையிட்டனர். 
புதுக்கோட்டை, புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் திருமதி. S. வசுமதி, உதவி திட்ட மேலாளர்கள்  திரு. இ. ஆரோன் ஜோஷ்வா ரூஸ்வெல்ட்,   திரு. சிவ. ஜெகதீசன், கறம்பக்குடி களப்பகுதி அணித்தலைவர் (பொறுப்பு) திரு. என். சந்திரசேகரன் மற்றும் ஒருங்கிணைபாளர்கள் முன்னிலையில் மக்கள் நிலை ஆய்வு குழுவினர் மக்கள் நிலை ஆய்வு முறைகளை செயல் படுத்தி அனைவருக்கும்  விளக்கினர். 

மேலும், மக்கள் நிலை ஆய்வு முறைகளை முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவர் திரு. தனவேந்தன் அவர்களும் கலந்து கொண்டு பார்வையிட்டார்.
பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் விபரங்களை அளித்து ஒத்துழைத்தனர்.
இறுதியில் மக்கள் நிலை ஆய்வு குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.
ஏற்கனேவே திருவாரூர் மாவட்டதில் இருந்து மகளிர் திட்ட அணி திருவாரூர் மாவட்ட புது வாழ்வு மாவட்ட திட்ட மேலாளருடன் வந்து புது கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை களப்பகுதியில் மக்கள் நிலை ஆய்வினை பார்வையிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.























No comments:

Post a Comment