Saturday 1 September 2012

திருவாரூர் மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் மக்கள் நிலை ஆய்வினை பார்வையிடல்

சமீபத்தில் தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் துவங்கப்பட்ட தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் பணிகள் கிட்டத்தட்ட புது வாழ்வு திட்ட மாதிரிகளை ஒத்து இருப்பதால் தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படும் மாவட்டத்தின் மகளிர் திட்ட அலுவலர்களை  புது வாழ்வு திட்டத்தின் திட்ட இயக்குனர் திருமதி. பெ. அமுதா இ.ஆ.ப. அவர்கள் புது வாழ்வு திட்டம் புதிதாக செயல்படுத்தப்படும் மாவட்டங்களை பார்வையிட பரிந்துரைத்தார். புது வாழ்வு திட்டத்தின் திட்ட இயக்குனர் பரிந்துரையின் பேரில்  கடந்த 25.08.2012 அன்று  திருவாரூர் மாவட்ட மகளிர் திட்டத்தில் இருந்து திட்ட அலுவலர் திரு. த. ராம சந்திரன் அவர்கள் தங்களுடைய
உதவி திட்ட அலுவலர்களுடன் திருவாரூர் மாவட்ட  புதுவாழ்வு திட்ட  மேலாளர் திரு. ரா. சுபாஷ் நாத் மங்களம், அவர்களுடன் கந்தர்வகோட்டை களப்பகுதி  கந்தர்வகோட்டை ஊராட்சி மருத்துவர் குடியிருப்பில் நடைபெற்ற மக்கள் நிலை ஆய்வில் கலந்து கொண்டு மக்கள் நிலை ஆய்வின் நிலைகளான கிராம சமூக வரைபடம் மற்றும் பொருளாதார
தரம் பிரித்தலை பார்வையிட்டனர். 

புதுக்கோட்டை புதுவாழ்வு திட்ட மாவட்ட திட்ட மேலாளர் திருமதி. S. வசுமதி, உதவி திட்ட மேலாளர் திரு. இ. ஆரோன்,   கந்தர்வகோட்டை களப்பகுதி அணித்தலைவர் திரு. இளவரசன்  மற்றும் ஒருங்கிணைபாளர்கள் முன்னிலையில் மக்கள் நிலை ஆய்வு குழுவினர்
மக்கள் நிலை ஆய்வு முறைகளை செயல் படுத்தி வந்திருந்தவர்களுக்கு விளக்கினர்.

மேலும் மக்கள் நிலை ஆய்வு முறைகளை கந்தர்வகோட்டை ஊராட்சி மன்ற தலைவர் திருமதி. கவிதா சிவா, துணை தலைவர் திரு. ராஜா, ஒன்றிய கவுன்சிலர் திரு. ராஜேந்திரன், வார்டு உறுப்பினர் திருமதி. பாமா சதாசிவம் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குடும்ப  விபரங்களை அளித்து ஒத்துழைத்தனர்.

இறுதியில் மக்கள் நிலை ஆய்வு குழுவினர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்தனர்.























 
 

No comments:

Post a Comment