Wednesday 4 July 2012

இன்டிமேட் பேஷன் டிசைனிங்- வேலை வாய்ப்பு முகாம்:




நமது புது வாழ்வு மாவட்ட அலுவலகத்தில் 03.07.2012 அன்று தாம்பரத்தில் உள்ள லீனியா பேஷன்ஸ் (இ) பி. லிட் நிறுவனத்துடன் இணைந்து வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. இதில் 26 பெண்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர்களில் 20 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த முகாமிற்கு லீனியா பேஷன்ஸ் (இ) பி. லிட் நிறுவனத்தின் மேலாளர் மற்றும் பணியாளர்கள் வந்திருந்தனர்.

இந்த முகாமில் பேஷன் டிசைனிங் பற்றியும் நிறுவனத்தில் வேலை அமைப்பு முறைகளையும் பற்றி சொல்லப்பட்டது.

மாவட்ட திட்ட மேலாளர் தேர்வு செய்யப்பட்ட பெண்களுடன் பணிகளின் போது கடைபிடிக்க வேண்டிய விஷயங்களைக் குறித்து கலந்துரையாடினார்.



No comments:

Post a Comment